பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனே வழங்குக: ராமதாஸ்

பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதிநெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனே வழங்குக: ராமதாஸ்

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதிநெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், 2768 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வின் விடைத்தாள்களை உடனடியாக திருத்தி, தகுதியானவர்களை கண்டறிந்து பணி நியமன ஆணைகளையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூடத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.