“பாஜக ஆட்சியை வெளிப்படையாக விஜய் விமர்சிக்காதது ஏன்?” - ஜவாஹிருல்லா கேள்வி
திராவிட மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த விஜய், மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்? என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை: “திராவிட மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த விஜய், மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்? அரசியல் களத்தில் அடி வைத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சினிமாக் கவர்ச்சி மூலம் மட்டுமே சிம்மாசனம் ஏறி விட முடியாது. நாட்டின் சவாலாக உருவெடுத்துள்ள பாசிச பாஜக எதிர்ப்பில் தனது உண்மைத் தன்மையைக் களத்தில் மெய்ப்பிப்பதே அதன் எதிர்காலத்துக்குச் சிறப்பு சேர்க்கும்,” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கிய நடிகர் விஜய் கட்சி அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தன் கட்சியின் கொள்கைகளை அறிவித்துள்ளார்