“பிரிவினைவாத அரசியலை சீமான், திருமாவளவன் கைவிட வேண்டும்” - தமிழக பாஜக

இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன் தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல் திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும், என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.

“பிரிவினைவாத அரசியலை சீமான், திருமாவளவன் கைவிட வேண்டும்” - தமிழக பாஜக

சென்னை: “இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன, மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன்தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல்.திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும். யார் தமிழன், யார் இந்தியன் என்கிற புரிதல் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு மட்டும் சரியாக விளங்காதது தமிழகத்தின் சாபக்கேடாக உள்ளது” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் கவலைகளைப் போக்க, சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மறந்துவிட்டு, கூட்டணி ஆட்சியில் அதிகாரம், முதல்வர் கனவு என அவசர அரசியல் கருத்துக்களை அள்ளி தெளித்து தான் ஒரு முற்போக்கு அரசியல்வாதி இல்லை என்பதை திருமாவளவன் நிரூபித்துவிட்டார். தமிழக அரசியல் களத்தில் சுயநல அரசியல் விளம்பரத்துக்கும், தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்கும் முன்னுரிமை அளித்து செயல்படும் அரசியல் வியாபாரிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய சூழ்நிலை தற்போது அனைவருக்கும் உருவாகியுள்ளது