“மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?” - அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பி.தங்கமணி கேள்வி

“திமுக ஆட்சியில் குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என்று அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

“மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?” - அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பி.தங்கமணி கேள்வி

மதுரை: “திமுக ஆட்சியில் குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என்று அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்து பேசியது: “அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.