மறையூர் அன்னசத்திரம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

மறையூரில் சிதைந்துள்ள அன்னசத்திரம் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும், என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார். 

மறையூர் அன்னசத்திரம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

விருதுநகர்: “மறையூரில் சிதைந்துள்ள அன்னசத்திரம் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மறையூரில் 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளது. இது கி.பி.1689 முதல் 1706 காலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். இவர் காலத்தில் தான் மறையூர் மற்றும் நரிக்குடி சத்திரங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு பிற்காலத்தில் பள்ளியாக இயங்கிவந்தது.