மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை: முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு
சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை, மதிய உணவு உள்ளிட்டவற்றை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார்.
சென்னை: மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனை, மதிய உணவு உள்ளிட்டவற்றை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 10 செமீ மழையிலேயே தெருக்கள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேம்பாலத்தில் கார்களை நிறுத்த அவசியமில்லாத வகையில் மேம்படுத்த வேண்டியவை குறித்து திட்டமிடப்படவில்லை. துணை முதல்வர் சொல்வது போல் நீர் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கை என்றால், நீர் தேங்கியிருக்கும் இடங்கள் எல்லாம் திமுக அரசு மீதான குற்ற அறிக்கையா.