‘மாஸ்டர்’ படத்துக்குப் பின் அஜித் சொன்னது இன்று நிறைவேறியது: அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி

“‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அஜித் என்னை அழைத்து அர்ஜுன், நாம் விரைவில் ஒன்றாக பணிபுரிவோம் என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது ஒருவழியாக நடந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்” என நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

‘மாஸ்டர்’ படத்துக்குப் பின் அஜித் சொன்னது இன்று நிறைவேறியது: அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி

சென்னை: “‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அஜித் என்னை அழைத்து அர்ஜுன், நாம் விரைவில் ஒன்றாக பணிபுரிவோம் என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது ஒருவழியாக நடந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்” என நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான காட்சிகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இப்படத்தில் அஜித்துடன் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். இது குறித்து அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நடிப்பு கனவைத் தொடர நான் முதன்முதலில் சென்னை வந்தபோது எப்படி, எங்கு தொடங்குவது என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.