‘முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

‘முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்

மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.