மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியுள்ளது.
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14,273 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,568 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2,500 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று காலை முதல் நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 108.50 அடியாகவும், நீர் இருப்பு 76.29 டிஎம்சியாகவும் இருந்தது.