மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

வேலூர்: மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையிலும் தூர்வார இயலாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு டிஎஸ்பி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகள் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கிறார். அந்த திட்டம் அதிமுகவால் தொடங்கப்பட்டதுதான். ஆனால், சரியாக ஆய்வு நடத்தாமல் தொடங்கப்பட்ட திட்டம் அது. இடத்தை தேர்வு செய்வதில்கூட தவறு செய்துள்ளனர். இதைப்பற்றி சட்டப்பேரவையில் அவர் பேசினால், உரிய பதில் அளிப்பேன்.