மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் ஆவணங்களை ஐகோர்ட் கிளைக்கு மாற்ற உத்தரவு
மைக்கேல்பேட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை: மைக்கேல்பேட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவி தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பின்னர், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.