வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!..  கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 

வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!..  கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இந்த ஏரி கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் வட்டப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும்.