‘அமரன்’ சர்ச்சை: மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பின்புலம்’ மறைக்கப்பட்டது சரியா?
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி வசூல் ரீதியாகவும், திரை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி வசூல் ரீதியாகவும், திரை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இப்படத்தின் கதை என்பது அனைவருக்கும் தெரியும்.
திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை அவசியமாகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை சார்ந்த சில கேள்விகள் எழாமல் இல்லை என்கின்றனர் ஒரு தரப்பினர்.