ஸ்பெயின் கனமழை - வெள்ளம்: 150+ உயிரிழப்புகள் முதல் திணறும் மீட்புக் குழுவினர் வரை!

ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் கனமழை - வெள்ளம்: 150+ உயிரிழப்புகள் முதல் திணறும் மீட்புக் குழுவினர் வரை!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் அவலநிலை அங்கு நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கைப் பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (அக்.31) அன்று வெள்ள பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தேடிய சோகம் காண்பவர்களின் மனங்களை கலங்கச் செய்தது.