சென்னை மாநகர சாலை தடுப்புகளில் 12 ஆயிரம் மலர் செடிகளை நடும் பணி தொடக்கம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மாநகர சாலை தடுப்புகளில் 12 ஆயிரம் மலர் செடிகளை நடும் பணியை வனத்துறையுடன் இணைந்து மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மாநகர சாலை தடுப்புகளில் 12 ஆயிரம் மலர் செடிகளை நடும் பணியை வனத்துறையுடன் இணைந்து மாநகராட்சி தொடங்கியுள்ளது.
தமிழகம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகர் சென்னை திடக்கழிவு மேலாண்மையில் பின்தங்கியே உள்ளது. அதனால் சென்னை மாநகரத்தை பொலிவுறச் செய்யும் வகையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தீவிர தூய்மைப் பணி, இரவு நேர தூய்மைப் பணி, பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி, பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப் பணி, சுவரொட்டிகளை அகற்றுதல், சாலையோரம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.