அழிவின் விளிம்பில் அரிய வகை முதலையும், நடன தவளையும்!

நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆய்வாளர்களால் அறியப்படும் முதுமலையில், புலிகள் முதல் வண்ணத்துப்பூச்சி வரை ஒவ்வோர் உயிரினத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.

அழிவின் விளிம்பில் அரிய வகை முதலையும், நடன தவளையும்!

முதுமலை: வன வளம் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம், பல்வேறு அரியவகை உயிரினங்களின் மிகமுக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. புலிகள், யானைகள் மட்டுமின்றி வரிக்கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள் போன்ற அரியவகை உயிரினங்களின் கடைசி புகலிடமாக முதுமலை காடு விளங்குகிறது.

நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆய்வாளர்களால் அறியப்படும் முதுமலையில், புலிகள் முதல் வண்ணத்துப்பூச்சி வரை ஒவ்வோர் உயிரினத்துக்கும் முக்கியத்துவம் அளித்து, கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்புகள் மூலமாக, குறிப்பிட்ட வகை உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி அவற்றின் தற்போதைய தகவமைப்பு, அச்சுறுத்தல், உணவு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கண்டறிய முடிகிறது.