‘காலநிலை மாற்றத்தால் சென்னை, புதுச்சேரி கடலோர பகுதிகள் பாதிக்கும்’ - பேராசிரியர் ஜனகராஜன்
கால நிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயரும் போது சென்னை, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் பாதிக்கும் நிலையுள்ளது என இடைநிலை நீர் வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பு தலைவரும் பேராசிரியருமான ஜனகராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி: காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயரும் போது சென்னை, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் பாதிக்கும் நிலையுள்ளது என இடைநிலை நீர் வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பு தலைவரும் பேராசிரியருமான ஜனகராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை சார்பில் உலக தர நிர்ணய தின விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் குறித்த தலைப்பில் ஜனகராஜன் பேசியது: “மக்கள் பயன்படுத்தும் செல்போன் முதல் அனைத்துக்கும் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நாம் வாழ அவசியமான காற்று, கடல் ஆகியவற்றுக்கு தர நிர்ணயம் இல்லை. ஆகவே, இயற்கை மாசுபடுவதைத் தடுப்பதற்கான தர நிர்ணயத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.