சுற்றுச்சூழல் பாதிப்புக்கு தெற்கு நாடுகள் பொறுப்பல்ல: பியூஷ் கோயல்
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு பொறுப்பல்ல என்றும், இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின் நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு பொறுப்பல்ல என்றும், இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின் நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) உச்சி மாநாடு 2024 புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இத்தாலி, இஸ்ரேல், பூட்டான், பஹ்ரைன், அல்ஜீரியா, நேபாளம், செனகல், தென்னாப்பிரிக்கா, மியான்மர், கத்தார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு அமைப்பு பொறுப்பல்ல. ஆனால், இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின் நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும்.