கும்பகோணம்: விநாயகர் சதுர்த்திக்காக மரவள்ளிக் கிழங்கில் சிலைகள் வடிவமைப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணத்தில் எளிதில் நீர் நிலைகளில் கரையக்கூடிய மரவள்ளிக் கிழங்கினாலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணத்தில் எளிதில் நீர் நிலைகளில் கரையக்கூடிய மரவள்ளிக் கிழங்கினாலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர், ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பார்கள். சிறப்புப் பெற்ற இந்த விழாவையொட்டி, கும்பகோணம் வீர சைவ மடத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுப்புறச் சூழலுக்கு கெடுதல் விளைவிக்காத இந்த விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு ஏராளமானோர் இப்போதே ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.