தீபாவளியன்று வளசரவாக்கத்தில் காற்றின் தரம் மோசம்; ஓசூரில் ஒலி மாசு அதிகம்

தீபாவளி நாளான அக்.31 அன்று காலை 6 மணி முதல் மறுநாளான நவ.1 காலை 6 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகபட்சமாக சென்னை - வளசரவாக்கத்தில் 287 மோசமான அளவிலும் பதிவானது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனினும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே தரக்குறியீடு பதிவானதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஓசூரில் 91.5 டிபி(ஏ) அதிகபட்சமாக ஒலி மாசு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று வளசரவாக்கத்தில் காற்றின் தரம் மோசம்; ஓசூரில் ஒலி மாசு அதிகம்

சென்னை: தீபாவளி நாளான அக்.31 அன்று காலை 6 மணி முதல் மறுநாளான நவ.1 காலை 6 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காற்றுத்தர குறியீட்டு அளவு அதிகபட்சமாக சென்னை - வளசரவாக்கத்தில் 287 மோசமான அளவிலும் பதிவானது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனினும், கடந்த ஆண்டைவிட குறைவாகவே தரக்குறியீடு பதிவானதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஓசூரில் 91.5 டிபி(ஏ) அதிகபட்சமாக ஒலி மாசு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும் முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வலியுறுத்தியிருந்தன.