சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் இன்று (நவ. 28) அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், "தேசிய, மாநில மற்றும் நகர அளவிலான தூய்மையான காற்று செயல் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் 2019 ஜனவரியில் தேசிய தூய்மை காற்று திட்டம் தொடங்கப்பட்டது.