சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 50 நாடுகளில் இருந்து 123 திரைப்படங்கள்
சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 123 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக, பட விழாவின் இயக்குநர் ஏவிஎம் கே.சண்முகம் தெரிவித்தார்.
சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 123 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக, பட விழாவின் இயக்குநர் ஏவிஎம் கே.சண்முகம் தெரிவித்தார்.
தமிழக அரசின் ஆதரவுடன் சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது பட விழா, வரும் 12 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த திரைப்பட விழாவின் இயக்குநர் ஏவிஎம் கே.சண்முகம் கூறியதாவது: திரைப்பட விழா வரும் 12-ம் தேதி பிவிஆர் சத்யம் திரையரங்கில் தொடங்குகிறது. தொடக்க விழாவில், வெனிஸ் பட விழாவில், கோல்டன் லயன் விருதுபெற்ற ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்' (The Room Next Door) என்ற படம் திரையிடப்படுகிறது. இறுதி நாளான 19-ம் தேதி, கேன்ஸ் விழாவில் தங்கப்பனை விருது பெற்ற ‘அனோரா' (Anora) படம் திரையிடப்படுகிறது. மொத்தம் 50 நாடுகளிலிருந்து 123 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட 11 திரைப்படங்கள், வெனிஸ் விழாவில் விருது வாங்கிய 3 படங்கள், பெர்லின் விழாவில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற 8 திரைப்படங்களும் அடங்கும்.