ஜெமினி கணேசன் பாண்டுரங்கனாக நடித்த ‘சக்ரதாரி’
புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின.
புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின. சுதந்திரத்துக்குப் பிறகு முழுமையாக சமூக கதைகளுக்குத் திரைப்படங்கள் மாறினாலும் சரித்திர, பக்திப் படங்களும் ஒரு பக்கம் தொடர்ந்து உருவாகி வந்தன. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘சக்ரதாரி’. கோரா கும்பரின் கதையை மையப்படுத்தி உருவான படம் இது.
கோரா கும்பராக சித்தூர் நாகையா நடித்தார். அவர் மனைவி துளசி பாயாக புஷ்பவல்லியும் சாந்தா பாயாக சூர்யபிரபாவும் நடித்தனர். நாகர்கோவில் மகாதேவன், எல்.நாராயண ராவ், கே.என்.கமலம், வரலட்சுமி, சுப்பையா பிள்ளை உட்பட பலர் நடித்தனர். அப்போது ஜெமினி ஸ்டூடியோவில், நடிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜெமினி கணேசன், பாண்டுரங்கனாக இதில் நடித்தார். ஆர்.கணேஷ் என்று அவர் பெயர் டைட்டிலில் இடம்பெற்றது. இதில் நடித்த புஷ்பவல்லிதான் ஜெமினி கணேசனின் 2-வது மனைவியாவார். இந்தி நடிகை ரேகாவின் தாய்.