புதிய படங்களை முதல் 3 நாள் விமர்சனம் செய்ய தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் கூறியது என்ன?

திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  அவதூறு பரப்பினால்  காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என  யோசனை தெரிவித்துள்ளது.

புதிய படங்களை முதல் 3 நாள் விமர்சனம் செய்ய தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் கூறியது என்ன?

சென்னை: திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்டிவ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி. சிவலிங்கம் என்ற சிவா தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது சங்கம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் வெற்றிகரமான வெளியீட்டுக்கும், அதன் செலவினங்கள், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.