மார்லிமந்து நீர்த்தேக்கம் மாசுபடும் அபாயம் - உதகை நகராட்சி முடிவால் சர்ச்சை
மார்லிமந்து அணை கட்டுமான பணி, பிரிட்டீஷ் காலத்தில், 1868-ம் ஆண்டு தொடங்கி 1870-ம் ஆண்டு நிறைவடைந்தது. அந்த காலத்தில் உதகை நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக மார்லிமந்து நீர்த்தேக்கம் இருந்தது.
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், ஓல்டு ஊட்டி, கோரிசோலை, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா உள்ளிட்ட நீராதார பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அந்தந்த வார்டுகளிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் சேமித்த பின் வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அதில், மார்லிமந்து அணை கட்டுமான பணி, பிரிட்டீஷ் காலத்தில், 1868-ம் ஆண்டு தொடங்கி 1870-ம் ஆண்டு நிறைவடைந்தது. அந்த காலத்தில் உதகை நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக மார்லிமந்து நீர்த்தேக்கம் இருந்தது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. அதன்பின், மக்கள்தொகைக்கு ஏற்ப பிற நீராதாரங்கள் உருவாக்கப்பட்டன.