சென்னை - அயனாவரம் மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் தேங்கும் கழிவுநீர்!
இந்த பாலமானது ரெட்டேரியில் இருந்து கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் நோக்கி செல்லும் மெட்ரோ குடிநீர் குழாய்களின் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே சென்னை மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் இடம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள சக்கரவர்த்தி நகரில் இருந்து புது ஆவடி சாலையை இணைக்கும் இணைப்பு பாலம் 1998-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மேம்பாட்டு நிதியின் மூலம் 2010-ம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது.