“காலநிலை மாற்றத்தை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை” - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

காலநிலை மாற்றத்தை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். 

“காலநிலை மாற்றத்தை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை” - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: காலநிலை மாற்றத்தை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், "பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உள்ளடக்கிய நடவடிக்கைகள், நீடித்த வளர்ச்சி ஆகிய அம்சங்கள் பருவநிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு முறைகளில் ஒன்றாக உள்ளன.