தமிழகத்தின் புதிய வனக் கொள்கை உருவாக்கம்: 15 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை

தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது.

தமிழகத்தின் புதிய வனக் கொள்கை உருவாக்கம்: 15 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை

சென்னை: தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வனக் கொள்கை வெளியிடப்பட்டது. இயற்கை காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடு பாதுகாப்பு, சுற்றுச்சூழலை உறுதி படுத்துதல், வன உற்பத்தியை மேம்படுத்துதல், காடுகளில் இருந்து பெறப்படும் நீர் அளவு அதிகரிப்பு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, அதன் மூலம் கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல் ஆகியவற்றை நோக்கமாக வனக் கொள்கை கொண்டிருந்தது.இந்நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய புதிய வனக் கொள்கையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.