அடையாற்றில் ரூ. 2.40 கோடியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்
ரூ.2.40 கோடி மதிப்பில் அடையாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறை நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
தாம்பரம்: ரூ.2.40 கோடி மதிப்பில் அடையாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறை நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியில் இருந்து வரதராஜபுரம், பெருங்களத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளின் வழியாக 42 கிலோ மீட்டர் பயணித்து வங்க கடலில் அடையாறு ஆற்று தண்ணீர் கலக்கிறது. இது தவிர நந்திவரம், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், படப்பை, சோமங்கலம், ஒரத்தூர், தாம்பரம், மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வழிந்தோடி அடையாறு ஆற்றில் கலக்கிறது.