பொங்கலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

பொங்கலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் தலைப்புடன் கூடிய டீசரை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.