“விமர்சிக்கட்டுமே...” - அமித் ஷாவை ‘ஹனுமன்’ என அழைத்த வருண் தவண் விளக்கம்

“விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. நான் வியந்து பார்க்கும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்தி பேசுகிறேன். அவ்வளவுதான்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டியது குறித்து நடிகர் வருண் தவண் தெரிவித்துள்ளார்.

“விமர்சிக்கட்டுமே...” - அமித் ஷாவை ‘ஹனுமன்’ என அழைத்த வருண் தவண் விளக்கம்

மும்பை: “விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. நான் வியந்து பார்க்கும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்தி பேசுகிறேன். அவ்வளவுதான்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டியது குறித்து நடிகர் வருண் தவண் தெரிவித்துள்ளார்.

வருண் தவண் நடித்துள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “எனக்கு அமித் ஷாவை பார்க்கும்போது, ‘ஹனுமன்’ போல தோன்றுகிறது. ஏனென்றால் நான் அண்மையில் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்நிகழ்வில் பேசிய அமித் ஷா எல்லா கேள்விகளுக்கும் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் முன்னிறுத்தி பேசினார்.