பாலாவின் ‘வணங்கான்’ ஜனவரி 10-ல் ரிலீஸ்!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தப் படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.