மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

2015-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படம் ‘இசை’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து முழுநேர நடிகராக மாறினார். வில்லன் நடிகராக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டடித்ததால் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் என எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இப்போது வில்லனாக நடிப்பதற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.