‘காவாலா’ பாடலில் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம்: தமன்னா கருத்து
நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்துவருகிறார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இவர் ஆடிய ‘காவாலா’ பாடலும் இந்தியில் ராஜ்குமார் ராவ் நடித்த ‘ஸ்த்ரி 2’ படத்தில் ஆடிய ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது.
நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்துவருகிறார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இவர் ஆடிய ‘காவாலா’ பாடலும் இந்தியில் ராஜ்குமார் ராவ் நடித்த ‘ஸ்த்ரி 2’ படத்தில் ஆடிய ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது. இவர் இந்தியில் நடித்துள்ள ‘சிக்கந்தர் கா முகதர்’ படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன்னா, ஜெயிலர் மற்றும் ஸ்த்ரி 2 படங்களில் தான் ஆடிய பாடல்கள் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ‘காவாலா’ பாடலில் நான் எனது சிறந்த பங்களிப்பை கொடுக்கவில்லை என்று உணர்ந்தேன். இன்னும் சிறப்பாகப் பண்ணியிருக்க வேண்டும். ‘ஆஜ் கி ராத்’ பாடலுக்கு இயக்குநர் படத்தின் முழு கதையையும் சொன்னார். வெறும் நடனம் மட்டுமல்ல, சிலகாட்சிகளும் இருக்கின்றன என்று சொன்னதால், ஒரே நிமிடத்தில் சம்மதித்தேன். அது மக்கள் விரும்பும் பாடலாக இருக்கும் என்று நினைத்தேன். இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.