டோவினோ, த்ரிஷாவின் ‘ஐடென்ட்டி’ டீசர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்

டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்துள்ள ‘identity’ மலையாளப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

டோவினோ, த்ரிஷாவின் ‘ஐடென்ட்டி’ டீசர் எப்படி? - மர்மமும் விறுவிறுப்பும்

சென்னை: டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்துள்ள ‘ஐடென்ட்டி’ (identity) மலையாளப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - தொடக்கத்தில் இருந்தே யாரோ ஒருவரின் முக அமைப்பை சொல்லிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. அவரின் பின்னணி குரலில் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. துப்பாக்கி சத்தம், பரபரப்பு, பயம், சந்தேகப் பார்வை என த்ரில்லர் களத்தில் படம் உருவாகியிருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை டீசரில் கவனம் ஈர்க்கிறது. காவல் துறை அதிகாரியாக வினய் நடித்துள்ளார்.

ஒருவித மர்மத்துடன் குற்றவாளியை கண்டுபிடிக்கும் தேடலில் நகரும் காட்சிகள் பல ட்விஸ்ட்களை உள்ளடக்கியுள்ளன. டோவினோ தாமஸ் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.