“யூடியூப் விமர்சனங்கள் பிரச்சினையை சட்ட ரீதியில் அணுக முடிவு” - திருப்பூர் சுப்பிரமணியம்
சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத்துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால் தான், எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்
திருப்பூர்: “சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், திரையரங்க வளாகங்களில் யூடியூப் சேனல்கள் படம் தொடர்பான விமர்சன பேட்டிகளை எடுக்க கூடாது என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இதற்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று (நவ. 21) செய்தியாளர்களிடம் கூறும்போது, “விமர்சனங்களுக்கு தடைவிதித்தால் யூடியூபர்ஸ் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்தால், ஒட்டுமொத்த திரைத் துறையும் பாதிக்கப்படும்.