ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் - ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன் தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக இப்போது தான் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது

ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் - ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன் தகவல்

’விடுதலை 2’ படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக இப்போது தான் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. “படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்” என்று பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.