விஜய் தேவரகொண்டா முதல் ராணா டகுபதி வரை: அல்லு அர்ஜுன் வீட்டில் குவிந்த பிரபலங்கள்
‘புஷ்பா 2’ ப்ரீமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகார்த்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ ப்ரீமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகார்த்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.
‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு எதிரான திரையுலக பிரபலங்கள் பலரும் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை சஞ்சல்குடா மத்திய சிறையிலிருந்து அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.