இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் ‘விடாமுயற்சி’

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. இங்கு 6 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் ‘விடாமுயற்சி’

சென்னை: அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. இங்கு 6 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அஜித், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று (டிச.17) முதல் தொடங்கியிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு 6 நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுவரை டீசரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.