கவுதம் மேனனின் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ டீசர் எப்படி? - மம்மூட்டியின் காமெடி களம்!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ (Dominic and The Ladies purse) படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துவரும் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ (Dominic and The Ladies purse) மலையாள படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டீசர் எப்படி? - “சார் எதும் பிரச்சினையாகுமா? அவர் கோபப்பட்டு நம்மிடம் வந்தால் என்ன செய்வது?” என மம்மூட்டியிடம் கோகுல் சுரேஷ் கேட்கிறார். “அதிகபட்சமாக அவர் நம் மீது தாக்குதல் நடத்தலாம். அப்படி அவர் செய்தால்” என்று தொடங்கி அவரை எப்படியெல்லாம் திருப்பி அடிக்கலாம் என விவரிக்கிறார் மம்மூட்டி. “அப்படியென்றால் அன்றைக்கு வீட்டுக்கு வந்தவர்களுக்கும் இதே அடி தானா?” என கோகுல் கேட்க, “அவர்களுக்கு அறிவியல்பூர்வமான தாக்குதல்களெல்லாம் தெரியாது. அதுமட்டுமில்லாமல் அது ஒரு சர்ப்ரைஸ் தாக்குதல். இருந்தாலும் சமாளித்துவிட்டேன்” என்கிறார் மம்மூட்டி.