ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கல்
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
சென்னை: ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு முதல் ஆளாக திரையுலகிலிருந்து சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.