‘சூது கவ்வும் 2’ Review: அசலை நெருங்கியதா, அபத்தமாக தொங்கியதா?
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைக்கதை, இசை, நடிப்பு என எல்லா தளங்களிலும் ஜெயித்த ஒரு படம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைக்கதை, இசை, நடிப்பு என எல்லா தளங்களிலும் ஜெயித்த ஒரு படம். அந்த படத்தில் நடித்த அனைவருமே இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். அப்படத்தின் தொடர்ச்சியாக மிர்ச்சி சிவா நடிப்பில் எஸ்.ஜே.இயக்கத்தில் வெளியாகியுள்ளது ‘சூது கவ்வும் 2’.
ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரான் (வாகை சந்திரசேகர்) பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து கண்விழிக்கிறார். எழுந்து பார்த்தவர், ஊழல்வாதியான நபர் (ராதா ரவி) முதலமைச்சர் பதவியில் இருப்பதைக் கண்டு கோபம் அடைகிறார். தனது நேர்மையான சிஷ்யரும் முன்னாள் அமைச்சருமான ஞானோதயம் (எம்.எஸ்.பாஸ்கர்) உதவியுடன் இன்னொரு கட்சி தொடங்கி ராதாரவிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஞானோதயத்தின் மகனும் நிதியமைச்சருமான அருமைப் பிரகாசம் (கருணாகரன்) ஆன்லைன் கேம் வழியாக மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். அந்த நேரத்தில் அவரிடம் இருந்த பணம் தொடர்பான முக்கியமான டேப்லட் ஒன்று காணாமல் போகிறது. கட்சியில் பணம் இல்லாததால் எம்எல்ஏக்கள் பலரும் அணி தாவுகின்றனர். இதனால் ஆட்சி கவிழ்கிறது.