இந்தி நடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் வழக்கு

பிரபல இந்தி நடிகர் ஷரத் கபூர். ஜோஷ், லக்‌ஷயா, தஸ்தக், ஜெய் ஹோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தி நடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் வழக்கு

பிரபல இந்தி நடிகர் ஷரத் கபூர். ஜோஷ், லக்‌ஷயா, தஸ்தக், ஜெய் ஹோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது 32 வயதான பெண் ஒருவர் மும்பை கர் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த நவ.26-ம் தேதி பட வாய்ப்புத் தொடர்பாக பேசுவதற்காக, ஷரத் கபூர் தன்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்ற போது தவறாக நடந்து கொண்டார்” என்று கூறியுள்ளார். இதனால் ஷரத் கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source : www.hindutamil.in