கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா வீட்டில் சடலமாக மீட்பு! 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா வீட்டில் சடலமாக மீட்பு! 

ஹைதராபாத்: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கச்சிபௌலி காவல்துறையினர் கூறுகையில், “ஷோபிதாவின் கணவர் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷோபிதா தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூரை சேர்ந்தவர் ஷோபிதா. அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.