விரைவில் தொடங்கும் ‘96’ படத்தின் இரண்டாம் பாகம்!

’96’ படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

விரைவில் தொடங்கும் ‘96’ படத்தின் இரண்டாம் பாகம்!

சென்னை: ’96’ படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தை விளம்பரப்படுத்தும்போது ‘96’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கதை மட்டுமே எழுதி வருவதாகவும், இன்னும் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரிடம் சொல்லவில்லை எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ‘96’ 2-ம் பாகத்தை தயாரிக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இருவரிடமும் முழுக்கதையை கூறவுள்ளார் இயக்குநர் பிரேம்குமார். 2025-ம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘96’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப குழுவே, 2-ம் பாகத்திலும் பணிபுரியவுள்ளது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.