விவாகரத்து வழக்கு: சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை
விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் இன்று நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை: விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் இன்று நேரில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதால் ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநராக உள்ளார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.