“தேவிஸ்ரீ பிரசாத் பேசியதில் தவறு இல்லை” - தயாரிப்பாளர் ரவிசங்கர்

 ‘புஷ்பா 2’ நிகழ்வில் தயாரிப்பாளருக்கு எதிராக பல்வேறு விஷயங்களை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசிய நிலையில், “அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை” என தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். 

“தேவிஸ்ரீ பிரசாத் பேசியதில் தவறு இல்லை” - தயாரிப்பாளர் ரவிசங்கர்

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ நிகழ்வில் தயாரிப்பாளருக்கு எதிராக பல்வேறு விஷயங்களை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசிய நிலையில், “அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை” என தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பாளரிடம், “தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் உங்களுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்துள்ளதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ரவிசங்கர், “அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இதை அவர் சினிமாவில் வரும் ஒரு வசனத்தை போல பேசினார். நகைச்சுவையாக தான் கூறினார். நாங்கள் அனைவரும் குடும்பம்போல இணைந்து இருக்கிறோம். இசைத் துறையில் தேவிஸ்ரீ பிரசாத் இருக்கும் வரை, எங்கள் படங்களுக்கு அவர் இசையமைப்பார். அதேபோல நாங்கள் படங்களை தயாரிக்கும் வரை, அவருடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.