திரை விமர்சனம்: கங்குவா

கோவாவில், போலீஸாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக குற்றவாளிகளைப் பிடித்துத் தருபவர் ஃபிரான்சிஸ் (சூர்யா).

திரை விமர்சனம்: கங்குவா

கோவாவில், போலீஸாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக குற்றவாளிகளைப் பிடித்துத் தருபவர் ஃபிரான்சிஸ் (சூர்யா). ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு கும்பல் ஸெடா (சேயோன்) என்னும் சிறுவனைக் கொல்லத் துடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஸெடா, ஃபிரான்சிஸிடம் தஞ்சம் அடைகிறார். ஸெடாவுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக உணர்கிறார் ஃபிரான்சிஸ்.

கி.பி 1070-ல் ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியின் இளவரசனாகவும் மக்களைக் காக்கும் வீரனாகவும் இருக்கிறான் கங்குவா (சூர்யா). 25,000 வீரர்களைக் கொண்ட ரோமானிய படை, பெருமாச்சி மீது போர் தொடுக்கவருகிறது. அவர்களுக்கு உதவும் கொடுவன் (நட்டி) உயிரிழந்துவிட, அவரது மகனை (சேயோன்) பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் கங்குவா. இதற்கிடையில் பெருமாச்சி மீது பெரும்பகை கொண்ட அரத்தி தீவின் அரசன் உதிரன் (பாபி தியோல்) பெருமாச்சியை அழிக்க ரோமானியருடன் கைகோக்கிறான். பெருமாச்சிக்கும் அரத்திக்குமான போரில் வென்றது யார்? கங்குவாவுக்கு என்ன ஆகிறது? இதற்கும் நிகழ்கால ஃபிரான்சிஸ் – ஸெட்டாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.