அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது: ஸ்ருதிஹாசன்
“அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: “அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது குறித்து பேட்டியொன்றில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பொதுமக்கள் கிட்டத்தட்ட எல்லா நேரமும் அப்பா குறித்தே தொடர்ந்து கேட்கின்றனர். அப்போது எனக்கு ‘நான் ஸ்ருதி, எனக்கென்று சொந்த அடையாளம் வேண்டும்’ என்று தோன்றும். மக்கள் என்னை நோக்கி கைகாட்டி, ‘அது கமலின் மகள்’ என்று சொல்கிறார்கள். என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான், ‘இல்லை, என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்’ என்று சொல்வேன். அது எங்களுடைய பல் மருத்துவரின் பெயர். ‘நான் பூஜா ராமச்சந்திரன்’. இது நானாக உருவாக்கிய ஒரு பெயர். என் அப்பா ஒரு நடிகரோ அல்லது ஒரு பிரபலமோ என்பதற்காக இதை சொல்லவில்லை.