ஜெயம் ரவியின் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

ஜெயம் ரவி நடிக்கும் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் சனிக்கிழமை (டிச.14) தொடங்கியுள்ளன. திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவியின் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் 34-வது படத்தின் பணிகள் பூஜையுடன் சனிக்கிழமை (டிச.14) தொடங்கின. டிசம்பர் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

‘பிரதர்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில், ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஜெனி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்தப் படங்களையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஜெயம் ரவியின் 34-வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார்.